
சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள, சீன இராணுவத்தின் மூலோபாய ஆதரவுப் படைக்கு சொந்தமான அறிவியல் ஆய்வுக் கப்பலான ‘ யுவான் வாங் 5’ எனும் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் நுழைய அனுமதிக்குமாறு வெளிவிவகார அமைச்சு, அம்பாந்தோட்டை துறைமுகத்தின் துறைமுக மா அதிபருக்கு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதிவரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் குறித்த கப்பல் தரித்திருக்கும் வகையில் குறித்த அனுமதியை வழங்குமாரு வெளிவிவகார அமைச்சு துறைமுக மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக அறிய முடிகிறது