சுந்தர். சி நடிக்கும் ‘தலைநகரம் 2’ படத்தின் டீசர் வெளியீட்டு திகதி அறிவிப்பு

இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘தலைநகரம் 2’ படத்தின் டீசர் வெளியிடப்படும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் வி. இசட். துரை இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தலைநகரம் 2’. இதில் ‘தலைநகரம்’ படத்தின் முதல் பாகத்தில் கதையின் நாயகனாக நடித்த சுந்தர் சி, இந்த திரைப்படத்திலும் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை பாலக் லால்வானி நடித்திருக்கிறார். இவர்களுடன் ‘வைகைப்புயல்’ வடிவேலு, யோகி பாபு, பிரபாகர், தம்பி ராமையா, ரவி மரியா, நடிகை ஐரா உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள்.

ஈ. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். எக்சன் வித் கொமடி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரைட் ஐ தியேட்டர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் எஸ். எம். பிரபாகரன் மற்றும் வி. இசட். துரை இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்படும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் டிசம்பர் மாதம் 14-ம் திகதி அன்று மாலை 5 மணி அளவில் இப்படத்தின் டீசர் வெளியாகிறது. இயக்குநர் சுந்தர் சி அண்மைக்காலமாக ஒரு படத்தை இயக்குவதும், ஒரு படத்தில் கதையின் நாயகனாக நடிப்பதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார். அதேபோல் ‘காபி வித் காதல்’ எனும் திரைப்படத்தை இயக்கி வெளியிட்ட பிறகு, அவர் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘தலைநகரம் 2’ எனும் திரைப்படத்தை வெளியிடுகிறார். சுந்தர் சி யின் இந்த அணுகுமுறையை திரையுலக வணிகர்கள் பெரிதும் வரவேற்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *