மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் ஒரு கோடிக்கும் அதிக பெறுமதி வாய்ந்த இரு வலம்புரி சங்குகளை விற்பனைக்காக எடுத்துச் சென்ற இருவரை விசேட அதிரடிப்படையினர் நேற்று சனிக்கிழமை (11) கைதுசெய்து மட்டக்களப்பு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அதிரடிப்படையினர் நேற்று மாலை 6 மணியளவில் மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது வியாபாரத்துக்காக சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான இரு வலம்புரி சங்குகளை எடுத்துச் சென்ற இருவரை சுற்றிவளைத்து கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த வலம்புரி சங்குகளை மீட்டுள்ளனர்.
கைதான சந்தேக நபர்களையும் மீட்கப்பட்ட வலம்புரி சங்குகளையும் அதிரடிப்படையினர் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து, சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.