பிரான்ஸின் தலைநகர் பாரிஸில், 12 வயதான சிறுமியை கடத்தி, கொலை செய்ததாக 24 வயதான யுவதி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இச்சிறுமியின் சடலம் சூட்கேஸ் ஒன்றுக்குள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
லோலா டேவியட் எனும் இச்சிறுமி, பாடசாலையிலிருந்து வீடு திரும்பவில்லை என இச்சிறுமியியின் பெற்றோர் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தனர்.
தமக்கு அறிமுகமில்லாத ஒரு யுவதியுடன் இறுதியாக அச்சிறுமியை கண்டதாக பேஸ்புக்கில் சிறுமியின் தாயார் தெரிவித்திருந்ததுடன், அச்சிறுமியை கண்டுபிடிக்க உதவுமாறு மக்களிடம் கோரியிருந்தார்.
அன்று இரவு 11 மணியளவில் பாரிஸ் நகரில் சூட் கேஸ் ஒன்றுக்குள் சிறுமியின் சடலம் இருப்பதை யாசகர் ஒருவர் கண்டறிந்தார்.
இச்சிறுமியின் கைகால்கள் டேப்பினால் கட்டப்பட்டிருந்தன. அவரின் உடல் சிதைக்கப்பட்டிருந்தாக செய்தி வெளியாகியுள்ளது.
மேற்படி யுவதி 24 வயதான டபியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் வீடற்ற ஒருவர் எனவும் அல்ஜீரியாவிலிருந்து வந்தவர் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.
இச்சிறுமியின் தந்தை அவர்கள் வசிக்கும் வீட்டுத் தொகுதியிலுள்ள கண்காணிப்பு கெமரா பதிவுகளை ஆராய்ந்தபோது, அறிமுகமில்லாத ஒருவருடன் அச்சிறுமி கட்டடத்துக்குள் நுழையும் காட்சி பதிவாகியிருந்ததைக் கண்டதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரான யுவதி தனியாக கட்டடத்துக்குள் வருவதையும் அரை மணித்தியாலத்தின் பின்னர் அவர் மிகப் பெரிய சூட்கேஸ் ஒன்றுடன் வெளியே வந்ததையும் தம் கண்டதாக அந்த யுவதியை நேரில் கண்டவர்கள், ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஒருவர் கூறுகையில், ‘அந்த சூட்கேஸை தூக்குவதற்கு உதவுமாறு அனைவரிடமும் அப்பெண் கோரினார். அவர் விசித்திரமாக நடந்துகொண்டார்.
ஒரு கட்டத்தில் அவர் உணவு விடுதியொன்றுக்கு முன்னாள் சூட்கேஸை வைத்துவிட்டு உள்ளேசென்றார். பின்னர் வெளியே வருவதும் உள்ளே செல்வதுமாக இருந்தார். அந்த சூட்கேஸுக்குள் என்ன இருக்கும் என நாம் யோசித்துக் கொண்டிருந்தோம். ஆனால் அது ஒரு சடலமாக இருக்கும் என நாம் ஒருபோதும் எண்ணவில்லை.
பின்னர் உணவு விடுதிக்கு முன்ளாலுள்ள பேக்கரிக்குள் அவர் சென்றார். பின்னர் எதுவும் நடக்காதைப் போல் திரும்பி வந்தார். அவர் உறுதியற்றவராக காணப்பட்டார்’ எனக் கூறியுள்ளார்.
சந்தேக நபரான டேபியாவை கடந்த சனிக்கிழமை பொலிஸார் கைது செய்தனர், சித்திரவதை, கொலை முதலான பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
பொலிஸ் அதிகாரி ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், இச்சந்தேக நபர் உடற்பாகங்களை விற்பனை செய்வது குறித்து உரைடியாடி வந்துள்ளார். ஆனால், அவர் நீண்டகாலமாக உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தவர். அவர் தெருவிலேயே வசித்தார். ஆனால், பாரிஸ் நகரில் அவருக்கு நண்பர்கள் இருந்தனர்’ எனக் கூறியுள்ளார்.
அதேவேளை, மேற்படி சூட்கேஸை தூக்குவதற்கு உதவிய ஆண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
-
-
சிறப்புக் கட்டுரை
திரவியங்கள் நிறைந்த மெலிஞ்சிமுனை கடலுக்கு ஆபத்து…
19 OCT, 2022 | 01:31 PM
-
சிறப்புக் கட்டுரை
நிலைமாறா பொருளாதாரக் கொள்கை : அசுர…
19 OCT, 2022 | 12:10 PM
-
சிறப்புக் கட்டுரை
உண்மை கண்டறியும் ஆணைக்குழு ; தென்னாபிரிக்க…
18 OCT, 2022 | 01:21 PM
-
சிறப்புக் கட்டுரை
தார்மீக நியாயப்பாட்டை மீண்டும் பெறுதல் இன்றியமையாதது
18 OCT, 2022 | 06:13 AM
-
சிறப்புக் கட்டுரை
ராஜபக்சாக்களுக்கு அதிகாரம் தேவை ; மக்களுக்கு…
13 OCT, 2022 | 07:20 AM
-
சிறப்புக் கட்டுரை
ஜெனீவா தீர்மானங்களின் காரணத்தை கையாளவேண்டியது அவசியம்
11 OCT, 2022 | 01:52 PM
-
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

நாங்கள் பிரிந்தது ஓர் நாடகம் ;…
2022-10-19 14:48:20

சீமானை சந்தித்து சிறீதரன் கலந்துரையாடல்
2022-10-19 13:54:22

சாதனைகளில் தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டம்
2022-10-19 12:15:38

சூட்கேஸூக்குள் 12 வயது சிறுமியின் சடலம்…
2022-10-19 12:08:51

நிர்வாண கோலத்தில் 92 குடியேற்றவாசிகள் துருக்கி…
2022-10-19 12:06:02

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் தீபாவளி சிறப்பு…
2022-10-18 16:36:39

ஜெயலலிதா மரணம் : சசிகலா உட்பட…
2022-10-18 12:30:04

இலங்கையிலிருந்து தமிழகத்தை உளவு பார்க்கும் சீனப்…
2022-10-18 11:58:12

தனது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக கார்,…
2022-10-18 14:09:30

கம்யுனிஸ்ட் கட்சியின் 20வது மாநாட்டிற்கு முன்னதாக…
2022-10-18 11:39:27

கடைகளில் பாலைக் கொட்டி பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்
2022-10-18 12:37:20

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு – வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 SEP, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 AUG, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் – கலாநிதி ஜெகான் பெரேரா
08 AUG, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 AUG, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 MAY, 2022 | 11:24 AM
மேலும் வாசிக்க