(எம்.வை.எம். சியாம்)
சூரியவெவ பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (நவ 19) கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சூரியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீகஹஜதுர பிரதேசத்தில் இருவருக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறி, பின்னர் அதில் ஒருவர் மற்றைய நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
இதன்போது காயமடைந்த நபர் சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவர் 57 வயதுடைய அம்பாந்தோட்டை, அந்தர்வெ எனும் பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.