சேகுவேராவின் மகன் திடீர் மரணம்

புரட்சியாளர் சேகுவேராவின் மகன் கமீலோ சேகுவேரா தனது 60 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

உலக அளவில் இன்று வரை புரட்சிக்கும், தியாகத்திற்கும் உதாரணமாக திகழ்ந்தவர் சேகுவேரா. கியூபாவை சேர்ந்த சேகுவேரா புரட்சியாளர், வைத்தியர், அரசியல்வாதி, இலக்கியவாதி என பன்முகத்தன்மை கொண்டவர்.

சேகுவேராவின் இளைய மகன் கமீலோ சேகுவேரா. இவர் சேகுவேரா ஆய்வு மையத்தின் இயக்குனராக பணிபுரிந்து வந்தார்

இந்நிலையில் கமீலோ சேகுவேரா வெனிசூலா நாட்டின் சராகவ் நகருக்கு சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 60 ஆகும்.

கமீலோ சேகுவேராவின் மறைவுக்கு கியூபாவின ஜனாதிபதிஇரங்கல் தெரிவித்து டுவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *