ஜனாதிபதியினால் விசேட அத்தியாவசிய சேவைகள் வர்த்தமானி வெளியீடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெட்ரோலிய உற்பத்திகள், எரிபொருள் விநியோகம், சுகாதார சேவைகள் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று முதல் (03) நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் ஆணைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளரால் இன்றையதினம் (03) இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Gallery

Leave a Reply

Your email address will not be published.