
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக நேற்று மாலை டோக்கியோவில் சந்தித்து உரையாடியுள்ளனர்.
உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடலாக இது இடம்பெற்றுள்ளது.
ஜப்பானின் முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட நிலையில் இந்த சந்திப்பு சுமார் 10 நிமிடங்களாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்தும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து விவாதித்ததுடன், சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சுக்கள் மற்றும் பேச்சு வார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து, மோடி, ரணிலிடம் கேட்டறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.