
ஜப்பானை தாக்கிய பாரிய சூறாவளி காரணமாக 90 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இதில் இருவர் பலியானதோடு 90 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சூறாவளி ஜப்பானின் தெற்கிலுள்ள நான்கு பிரதான தீவுகளை நேற்று தாக்கியுள்ளது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 3 லட்சத்து 50 ஆயிரம் வீடுகளுக்கான மின்சாரம் துண்டிப்படைந்தது.
வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன. மணித்தியாலத்துக்கு 234 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியுள்ளது.