ஜப்பான் செல்ல தயாராகும் ஜனாதிபதி!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதி ஜப்பான் செல்லவுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானுக்கான விஜயத்தின் பின்னர் பிலிப்பைன்ஸின் மணிலா நகருக்குச் செல்லும் ஜனாதிபதி அங்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

பிலிப்பைன்ஸ் விஜயத்தின் போது செப்டெம்பர் 29ஆம் திகதி இடம்பெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிகழ்விலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.