ஜெயம் ரவியின் அகிலன் திரைப்பட ரிலீஸ்… மீண்டும் தள்ளிவைப்பு!

ஜெயம் ரவி பூலோகம் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் நடிக்கும் அகிலன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் வடசென்னையில் நடக்கும் குத்துச் சண்டை போட்டிகளை மையமாக வைத்து உருவான திரைப்படம் பூலோகம். இந்த படத்தை எஸ் பி ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கி இருந்தார். இந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து அதே கூட்டணி இரண்டாவது படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்துக்கு அகிலன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் துறைமுகம் சார்ந்த ஒரு கேங்ஸ்டர் படம் என சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஜெயம் ரவி அகிலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பெரும்பாலான காட்சிகளை தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் இயக்குனர் கல்யாண் படமாக்கி முடித்துவிட்டார். படம் 1980 மற்றும் நிகழ்காலம் இரண்டு கால கட்டங்களில் நடக்கும் விதமாக படமாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சமீபத்தில் படத்தின் டீசர் வெளியான நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொன்னியின் செல்வன் ரிலீஸ் காரணமாக கிறிஸ்துமஸ் நேரத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்போது அந்த ரிலீஸும் தள்ளிப் போய் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *