ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஊழியர்கள் தமது பணிகளுக்காக சாதனங்களிலிருந்து டிக்டொக் செயலியை நீக்க வேண்டும் என அப்பாராளுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் ஊழியர்கள், தாம் உத்தியோகபூர்வ பணிகளுக்காக பயன்படுத்தும் தொலைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் டெப்லெட் கணினிகளிலிருந்து டிக்டொக்கை நீக்க வேண்டும் என ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் ரொபர்ட்டா மெட்சோலா, செயலளார் நாயகம் அலெஸாண்ட்ரோ சியோக்செட்டி ஆகியோர் தீர்மானித்துள்ளனர்.

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பணியாற்றும் சுமார் 8000 ஊழியர்களுக்கு இது தொடர்பான குறிப்பொன்றை அப்பாராளுமன்றத்தின் புத்தாக்கு மற்றும் தொழில்நுட்ப ஆதரவுக்கான பணியகம் அனுப்பியுள்ளது.

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களும் ஊழியர்களும் தமது பிரத்தியேக சாதனங்களிலிருந்தும் டிக்டொக்கை நீக்குமாறு பலமாக சிபாரிசு செய்யப்படுவதாகவும் அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய அரச நிறுவனங்களின் சாதனங்களிலிருந்து நேற்றுமுதல் டிக்டொக் நீக்கப்படுவாக கனேடிய அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்க மத்திய அரச நிறுவனங்கள் சாதனங்களிலிருந்து 30 நாட்களுக்குள் டிக்டொக்கை நீக்குமாறு வெள்ளை மாளிகை நேற்றுமுன்தினம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்:

அமெரிக்க அரசின் சாதனங்களிலிருந்து டிக்டொக்கை 30 நாட்களுக்குள் நீக்க வேண்டும் : வெள்ளை மாளிகை உத்தரவு

உத்தியோகபூர்வ சாதனங்களில் இருந்து டிக்டொக் செயலி நீக்கம் – கனடா அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *