டிசம்பர் காலஎல்லையை தவறவிட்டால் ஜனவரியில் சர்வதேச நாணயநிதியத்திடம் செல்வதற்கு இலங்கை எண்ணியுள்ளது என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் டிசம்பர் இலக்கை அடைவது என்பது அளவுக்கதிகமான நம்பிக்கை அதனை தவறவிட்டால் கூட ஜனவரி வரை அவகாசம் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த சில வாரங்களில் இருதரப்பு கடன்வழங்குநர்களின் உத்தரவாதம் எங்களிற்கு கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் விதம் குறித்து நாங்கள் அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியம் டிசம்பரில் விடுமுறைக்கு செல்லும் என தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் அது அவர்களின் நிகழ்ச்சி நிரலில் பல விடயங்கள் உள்ளதால் அவர்கள் வாரத்திற்கு மூன்று நாளாவது பணிபுரிவார்கள் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *