அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் 2021 ஜனவரி 6 ஆம் திகதி நடந்த வன்முறைகள் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தொடுக்க முடியும் என அந்நாட்டு நீதித்திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது.
2020 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தான் தோல்வியுற்றதை டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில், 2021 ஜனவரி 6 ஆம் திகதி பாராளுமன்றத்தின் செனட் சபையில் தேர்தல் கல்லூரி வாக்குகளை எண்ணி சான்றளிக்கும் நடவடிக்கையின்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மேற்படி வன்முறைகள் தொடர்பாக டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தொடுக்க முடியும் என நீதிமன்றத்திடம் அமெரிக்க நீpதித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஒருவரின் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் தொடர்பாக சட்ட விலக்கு உள்ளது. ஆனால், அவரின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு அப்பாற்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியும் என நீதித்திணைக்களம் தனது அபிபிராயத்தை தெரிவித்துள்ளது.