ட்ராவிட்டுக்கு பதிலாக வி.வி.எஸ். லக்ஷ்மன்!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண 20 இருபது தொடரின் இந்திய அணியின் இடைக்கால தலைமைப் பயிற்விப்பாளராக வி.வி.எஸ். லக்ஷ்மன் செயற்படவுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்றுமுன்தினம் கொவிட்-19  தொற்று உறுதியான ராகுல் ட்ராவிட் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக  விவிஎஸ் லக்ஷ்மன் இடைக்கால பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார்.

மருத்துவ கண்காணிப்பில் உள்ள ராகுல் ட்ராவிட் கொவிட் -19 தொற்றிலிருந்து குணமடைந்த பின்னர் அணியுடன் இணைந்துக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்ற  இந்திய அணியுடன் பயணித்த வி.வி.எஸ். லக்ஷ்மன், கே.எல் ராகுல், தீபக் ஹூடா மற்றும் அவேஷ் கான் ஆகியோருடன் சிம்பாப்வேயில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.