தமிழகத்தைப் போல கேரளாவிலும் அவதார் ரிலீஸ் ஆவதில் சிக்கல்?

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூலை அள்ளி குவித்த படம் ‘அவதார்’. இன்று வரை உலக அளவில் அதிகம் வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற பெருமையும் அவதார் வசம் உள்ளது. இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

அவதார் தி வே ஆப் வாட்டர் என்ற இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் டிசம்பர் 16ல் வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான முன்பதிவு சில நாட்களுக்கு முன்பே தொடங்கியது.

இந்த படத்தின் விநியோகஸ்தர்கள் சார்பாக தியேட்டர் வசூலில் 70 சதவீதப் பங்கை கேட்பதால் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழகத்தில் அவதார் 2 ரிலீஸில் சிக்கல் எழலாம் என சொல்லப்படுகிறது.

இதே பிரச்சனை இப்போது கேரளாவிலும் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கு அதிக தொகையை விநியோகஸ்தர்களுக்கு கொடுக்க திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *