தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமுறைகளில் ஒன்றாக காணப்படும் சித்தமருத்துவம் நோக்கி நோயாளர்கள். சித்த மருத்துவ அத்தியட்சகர் மனோறஞ்சித்தமலர்

தலைமன்னார்  நிருபர் வாஸ் கூஞ்ஞ)

வடக்கு மாகாணத்தில் சித்த மருத்துவத்தில் பலர் ஆர்வம் காட்டி வருவதாகவும் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமுறைகளில் ஒன்றாக காணப்படும் சித்தமருத்துவம் மருவிவரும் நிலையில் வடமாகாணத்தில் மேலும் புதிதாக சித்த மருத்தவ மனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என யாழ் மாவட்ட சித்த மருத்துவ அத்தியட்சகர் வைத்திய கலாநிதி மனோறஞ்சித்தமலர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்பொழுது வடக்கு மாகாணத்தில்  மக்கள் பலர் தங்கள் நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக சித்த மருத்துவமனையினை நாடிச் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இது தொடர்பாக யாழ் மாவட்ட சித்த மருத்துவ அத்தியட்சகர் வைத்திய கலாநிதி மனோறஞ்சித்தமலரிடம் வினவியபோது அவர் கருத்து தெரிவிக்கையில்

தற்பொழுது ஆங்கில மருந்து தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் என்ற கருத்துகளுக்கு அப்பால் நோயாளிகள் சித்த மருத்துவத்தின் மூலம் நலன் பெற்று வருவதுடன் இதில் ஆர்வம் காட்டவும் தொடங்கியுள்ளனர்.

சித்த மருத்துவமனையில்  சிகிச்சை பெற்ற பலர் தங்கள் உடலில் உள்ள நோய்களை  தீர்த்து  ஆரோக்கியமாக  காணப்படுகின்றனர்

இன்னும்  சிலர்  தொடர்ந்தும்  சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றாக காணப்படும் சித்த மருத்துவம் மருவிவரும் நிலையில் வடமாகாணத்தில் கட்டிவளர்க்கப்பட்டு வருகின்றது

இந்த சித்த மருத்துவம் ஊடாக பல்வேறு நேய்களுக்கான தீர்வுகள் முன்வைக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில்தான் தற்போது யாழ்ப்பாணத்தில்  கடந்த ஓகஸ்ட் மாதம் (01.08.2022) புதிதாக  அமையப்பெற்ற மாவட்ட சித்த மருத்துவமனை  தற்போது அச்சுவேலி செல்வநாயகபுரத்தில் அமைந்துள்ள சிறுவர் நந்தவனம் பாடசாலை (மக்கோனா) அருகில் இயங்கிவருகின்றது .

இங்கு இலவச மருத்துவ சேவையை பெற்றுக்கொள்ளலாம் பொதுவான நோய்களுக்கான  வெளிநோயாளர்  சிகிச்சை பிரிவு  சிறந்த  மருத்துவர்களினால் மருத்துவ சேவை இடம்பெற்று வருகின்றது

வெளி நோயாளர்களை  மருத்துவர்கள் பார்வையிடும் நேரமhக

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணிமுதல் பிற்பகல் 4மணி வரையும் இசனிக்கிழமை காலை 8மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் ஞாயிறு காலை 8மணி முதல் நண்பகல் 12 மணிவரை மற்றும் அரச விடுமுறை தினங்களில் காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இலவச மருத்துவ சேவை இடம்பெற்று வருகின்றது.

அத்துடன் கடந்த 01.09.2022 திகதியிலிருந்து தங்கி நின்று கிசிச்சை பெறும் உள்ளக நோயாளர் விடுதி நோயாளர்களுகளின் நலன் கருதி சகல வசதிகளுடனும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இங்கு சித்த மருத்துவமனையில் இடம்பெறும் சிகிச்சைகளாக .வதரோகம் சிறுவர் நோய்கள்..தோல் நோய்கள்..சுவாச நோய்கள். பெண்களுக்கு ஏற்படும் நோய்களும் அதற்கான தீர்வுகளும். சலரோகம். .குருதி அமுக்கம். .உடற்பருமன். குறிப்பாக தொற்று நோய்கள்இ தொற்ற நோய்கள் என பலதரப்பட்ட நோய்களுக்கான சிகிச்சைகள் (காய்ச்சல்இ தடிமன். சளிஇதும்பல் (பீனிசம்)இதலைமுடி உதிர்தல்இ முகப்பருக்கள்) அக்குபஞ்சர் சிகிச்சை முறை. .வர்ம சிகிச்சை. .பஞ்சகர்ம சிகிச்சை. அட்டை விடுதல் .(வரிக்கோசு) சுட்டி முறை சிகிச்சை (ஆணிக்கூடு அகற்றுதல்) பாரம்பரிய வைத்திய முறையிலும் சிகிச்சைகள் இடம்பெற்று வருகின்றது.

மேலும் நெறிவு முறிவு சிகிச்சை முறை. பழைய நோக்களுக்கு பத்துக்கட்டுதல். .உளுக்குஇ சுழுக்கு பார்த்தல். போன்ற பலதரப்பட்ட சிகிச்சை முறை திறம்பட பாரம்பரிய வைத்தியர்களினால் வழங்கப்பட்டு வருகின்றது.

உள்நாட்டுஇ வெளிநாட்டு நோயாளர்கள் கட்டணம் செலுத்தி விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் சிறப்பு மருத்துவ சேவையும் இடம்பெறவுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ஏற்ற வகையில் நோயாளர் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான தனி அறைஇ மலசல கூடம்இ உணவுஇ சிறந்த  சூழலுடன்  இசைந்த  சிறப்பு  மருத்துவ  சேவையும்  வழங்கப்படவுள்ளது.

இச்சேவையினை பெற விரும்புகின்ற நோயாளர்கள் முற்பதிவினை சித்த வைத்தியசாலையில் பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் தொடர்புகளுக்கு 0773782739 அல்லது 0212212809 இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்கள் செவையினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் சேவையானது வட மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் வைத்திய கலாநிதி ஜே.கனகேஸ்வரியின் அளப்பரிய ஒத்துழைப்பு மற்றும் கெளரவ ஆளுனர் அவர்களின் அனுமதியுடன் நடைபெறுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *