தமிழர்களுக்கு அநுரகுமாரவின் எச்சரிக்கை செய்தி

தமிழர்களுக்கு அநுரகுமாரவின் எச்சரிக்கை செய்தி

அரசியல் தீர்வு என்ற பெயரில் தமிழ்ப் பிரதிநிதிகளைப் பேச்சு மேசைக்கு அழைத்து ஒட்டுமொத்த தமிழினத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏமாற்ற முயற்சிப்பதாக ஜே.வி.பியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரணிலின் இந்தச் சதி வலையில் சிக்கி ஏமாற வேண்டாம் என்று தமிழ் மக்களிடமும், அவர்களின் பிரதிநிதிகளிடமும் ஜே.வி.பி. கேட்டுக் கொள்வதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ராஜபக்சர்களைப் பாதுகாக்கும் நோக்குடன் ஜனாதிபதி கதிரையில் அமர்த்தப்படுள்ள ரணில் விக்ரமசிங்கவை விரைவில் வீட்டுக்கு அனுப்பியே தீருவோம்.

தமிழர்களுக்கு அநுரகுமாரவின் எச்சரிக்கை செய்தி | Anura Kumara Dissanayake Statement

ரணிலை விரட்டும் ஜனநாயகப் போராட்டத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும் கட்சி பேதமின்றி இணைய வேண்டும்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

 

மக்கள் ஆணை இல்லாமல் ஜனாதிபதியாகிய ரணிலை நம்ப வேண்டாம் என்று சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

ஊழல், மோசடி இல்லாத கட்சி ஜே.வி.பியே. எனவே, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்குடன் நாம் நாடு தழுவிய ரீதியில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

தமிழர்களுக்கு அநுரகுமாரவின் எச்சரிக்கை செய்தி | Anura Kumara Dissanayake Statement

 

ஜே.வி.பியின் ஆட்சியில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குக் காலத்தை இழுத்தடிக்காமல் தீர்வை நாம் வழங்குவோம். ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு பாடம் புகட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலும் நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

தேர்தல் உரிய திகதியில் நடத்தப்பட வேண்டும். மக்கள் தங்கள் வாக்குகளால் இந்த அரசாங்கத்திற்கு பதிலடி வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *