தற்போதைக்கு தேர்தல் நடக்க வாய்ப்பில்லை – மொட்டுக் கட்சியினர் அஞ்சத் தேவையில்லை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுவது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது வாதப் பிரதிவாதங்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர்.

இந்தநிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தற்போதைய சூழ்நிலையில் நடைபெறாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பசில் ராஜபக்ச குறித்த விடயத்தை கூறியுள்ளதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ச

தற்போதைக்கு தேர்தல் நடக்க வாய்ப்பில்லை - மொட்டுக் கட்சியினர் அஞ்சத் தேவையில்லை! | Local Gov Election Political Crises In Sri Lanka

 

இதனால், தேர்தல் தொடர்பில் தேவையில்லாத குழப்பங்கள் அடையத்தேவையில்லை என மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிதிபிரச்சனை காரணமாக வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு அரசாங்க அச்சகம் மறுத்துள்ளதால், தபால் மூல வாக்களிப்பையும் தேர்தல் திணைக்களம் தற்போது ஒத்திவைத்துள்ளது என பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *