(வாஸ் கூஞ்ஞ)
தலைமன்னார் பியர் முன்பள்ளி மாணவர்களின் 2022 ம் ஆண்டுக்கான வருடாந்த சந்தை வியாழக்கிழமை (13.10.2022) தலைமன்னார் பியர் ரயில்வே நிலையத்துக்கு முன்பாக உள்ள பஸ் நிலைய பகுதியில் இடம்பெற்றது.
தலைமன்னார் பியர் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் ஒழுங்கமைப்பின் கீழ் இவ் சந்தை இவ் முன்பள்ளி சிறார்களால் நடாத்தப்பட்டது.
இவ் சந்தைக்கு பெரும் திரளான மக்கள் பாடசாலை மாணவர்கள் வருகை தந்து பொருட்களை வாங்கியதுடன் சிறார்களின் மனதை குளிர்மைப்படுத்திச் சென்றதையும் நோக்கக்கூடியதாக இருந்தது.