போஷாக்கு பொதிகளை வழங்கும் திட்டம் பல மாதங்களாக முடங்கிக் கிடப்பதாகவும், தற்போது உணவு மற்றும் பொருட்களின் விலையேற்றத்தால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன கருத்து தெரிவிக்கையில், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு போஷாக்கு பொதிகளை வழங்கும் திட்டம் நிதி பற்றாக்குறையால் முடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதனை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாதத்துக்குள் அதற்கான மானியங்கள் கிடைக்கப்பெறும் எனவும் அதன் பின்னர் உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போஷாக்கு திட்டத்தின் கீழ் 155,000க்கும் அதிகமான கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 4,500 ரூபா பெறுமதியான போஷாக்கு பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.