திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் மன்னார் நீதவான் முன்னிலையிலேயே பிரித்தெடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படும்.

( வாஸ் கூஞ்ஞ) 25.08.2022

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களை மன்னாh ;நீதவான் முன்னிலையிலேயே பிரித்தெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட்   காபன் பரிசோதனை நிறுவனத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பவதற்கான மாதிரிகளை தெரிந்தெடுத்து அனுப்புவதற்கு கட்டளையாக்கப்பட்டுள்ளது.

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு புதன்கிழமை (24.08.2022) மன்னார் நீதவான் நீதிமன்றில் விசாரனைக்காக எடுக்கப்பட்டது.

ஏற்கனவே  மன்னார்  திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் பல காலங்களாக அனுராதபுரம் வைத்தியசாலையில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் கட்டளைக்கு அமைவாக அமெரிக்காவிலுள்ள் புரோகாட்  என்னும் ஒரு நிறுவனத்தில் பரிசோதனைக்காக அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வழக்கு தொடுனர் சார்பாக கேட்கப்பட்டிருந்தது.

இதன் நிமித்தம் அநுராதபுரத்தில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள இவ் மனித எச்சத்தை பிரித்தெடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்புவதற்காக கடந்த தவணையின்போது வழக்கு தொடுனர் மன்றில் கோரிக்கை ஒன்றை வைத்திருந்தனர்.

அத்துடன் அநுராதபுரம் நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு முன்பாக மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி அதற்கு உறுதுணைபுரிந்து அதற்கான எற்பாடுகளை மேற்கொள்ளும்படி கட்டளை ஒன்று வழங்குமாறும் மன்றில் வேண்டப்பட்டு இருந்தது.

இதற்கமைய மன்றில் கட்டளை ஒன்று  புதனிகிழமை (24.08.2022) மன்றில் வாசிக்கப்பட்டது.

அதாவது ஏற்கனவே கொண்டு செல்லப்பட்ட மனித எச்சங்களை மன்னார் நீதவான் நீதிமன்றுக்கு ஆஜர்படுத்தி மன்னார் நீதவான்  நீதிமன்ற நீதிபதி  முன்னிலையிலேயே பிரித்தெடுக்கப்பட வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டுள்ளது

இவ் வழக்கு புதன்கிழமை (24.08.2022) மன்றில் விசாரனைக்கு எடுக்கப்பட்டபோது இவ் வழக்கில் பாதிப்படைந்தவர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரனி; வீ.எஸ்.நிரஞ்சனும் மற்றும் திருமதி றனித்தா ஞானராஜ் காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் திருமதி பி.புராதினி அவர்களும் மன்றில் ஆஐராகி இருந்தனர். அத்துடன் எதிர் தரப்பில் அரச சட்டத்தரனி மற்றும் புலனாய்வு பிரிவினரும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

இவ்வழக்கானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ந் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.