திருமண நிகழ்வில் கலந்து கொண்ட தளபதி விஜய்

பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் தான் வாரிசு. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் போஸ்டர்கள்,பாடல்கள் என அனைத்தும் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.இத்திரைப்படத்தின் பூஜை இம்மாதம் 5 ஆம் திகதி நடைபெற்றது.இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளி அதிகம் வைரலாகி வருகிறது.

கையில் பூங்கொத்துடன் சிரித்துக் கொண்டே விஜய் நடந்து வர, அவரை சுற்றிலும் அதிகமானவர்கள் சூழ்ந்தும் கொண்டனர். இது தொடர்பான விஜயின் புகைப்படங்கள் மற்றும் காணொளி,தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *