
திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி 2022 தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக அரங்கில் சனிக்கிழமை முதலாம் திகதி நடைபெற்றது.
இன்டர்நேஷனல் மார்சல் ஆட்ஸ் கழகம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பில் மேற்படி சுற்றுப்போட்டி சிஹான். முகமத் இக்பால் தலைமையில் நடைபெற்றதுடன் பிரதம விருந்தினராக பேராசிரியர். எம்.எம்.பாஃசில் கலந்து சிறப்பித்தார்.
நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும், இந்தியாவிலிருந்தும் கராத்தே வீரர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.