
(எம்.வை.எம்.சியாம்)
நாட்டின் இருவேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை (24) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சின்னக்குளம் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 37 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறிபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தமன்வௌ பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 52 வயதுடைய நுவரகல பிரதேசத்தைச் சேர்ந்த கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.