துருக்கிக்கு உதவிகளை வழங்க தயார் நிலையில் இருக்கும் இலங்கை!

துருக்கிக்கு உதவிகளை வழங்க தயார் நிலையில் இருக்கும் இலங்கை!

துருக்கி மற்றும் சிரியா எல்லையில் இடம்பெற்ற அதி பயங்கர நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு, பல நாடுகள் உதவிகளை அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு உதவுவதற்கு இலங்கையும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவக் குழு  தயார்

 

 

துருக்கிக்கு உதவிகளை வழங்க தயார் நிலையில் இருக்கும் இலங்கை! | Sri Lanka Ready To Help Turkey Earthquake Affect

அந்தவகையில், உதவிகளுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டால், இராணுவ, மருத்துவ மற்றும் பொறியியல் படைகள் உள்ளடங்கலாக 300 பேர் கொண்ட இராணுவக் குழு துருக்கியை நோக்கி விரைவதற்கு தயார் நிலையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவருவதாகவும், உயிரிழப்புக்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *