துருக்கியில் வெடிகுண்டுத் தாக்குதல் – 6 பேர் உயிரிழப்பு, 81 பேர் காயம்

துருக்கியின் மத்திய இஸ்தான்புல்லின் பரபரப்பான பகுதியில் இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததுடன், 81 பேர் காயமடைந்தனர்.

அதிக எண்ணிக்கையிலான கடைகள் உள்ள தெருவில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. பெண்ணொருவரினால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலாக இதனை சந்தேகிப்பதாக இஸ்தான்புல் ஆளுனர் தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பு இடம்பெறுவதற்கு முன் சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள நீண்ட இருக்கையில் அமர்ந்திருந்ததாக துருக்கியின் நீதி அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

குறித்த பெண்ணே வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இருந்த போதும் தாக்குதலுக்கு எந்தவொரு இயக்கமும் இதுவரை உரிமை கோரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *