துருக்கி, சிரியா நிலநடுக்கம் – அதிகரிக்கும் உயிரிழப்புக்கள் – கைகொடுக்கும் உலகநாடுகள்!
பல கட்டிடங்கள், வீடுகள் முற்றாக உருக்குலைந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதுடன், உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தநிலையில், பல்வேறு நாடுகளின் அவசர உதவிகள் வந்துள்ளதுடன், பல நாடுகளின் மீட்புக்குழுவினர் துருக்கியை நோக்கி விரைவதாக சொல்லப்பட்டுள்ளது.
உயிரிழந்தோர் எண்ணிக்கை
துருக்கி, சிரியா நிலநடுக்கத்தினால் தற்போதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4000 இணை தாண்டியுள்ளதுடன், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 15000 ஐ கடந்துள்ளது.
குறித்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கவலை வெளியிடப்பட்டுள்ளது.
45 நாடுகள் அவசர உதவி
45 நாடுகள் அவசர உதவிகளை அறிவித்துள்ளதுடன், இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்காக பல நாடுகளின் இருந்தும் மீட்புக்குழுவினர் துருக்கி மற்றும் சிரியாவை நோக்கி சென்றுள்ளனர்.
துருக்கிய வரலாற்றில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அனர்த்தமாக அறிவித்துள்ள அந்நாட்டு அரசு, இதனை 7 நாட்களுக்கு தேசிய துக்க தினமாக அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.