துருக்கி நிலநடுக்கத்தில் இலங்கைப் பெண் ஒருவர் மரணம்: உடல் மீட்கப்பட்டது!

துருக்கியில்  ஏற்பட்ட  நிலநடுக்கத்தில் இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்ததை துருக்கியிலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர் 64 வயதுடைய சந்திரிகா ராஜபக்க்ஷ எனவும், இவர் கலகெதரவை  சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் மகளே தனது  தாயை அடையாளம் கண்டுள்ளார் எனவும் துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க இன்று (12) தெரிவித்துள்ளார்.

இடிந்து வீழ்ந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டபோதே குறித்த பெண்ணின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது.

தூதரகத்தின் கூற்றுப்படி, அந்தப் பெண் துருக்கியில் பல ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்,  அவர்  துருக்கிய பிரஜை ஒருவரை திருமணம் செய்து கொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *