துருக்கி பூகம்பத்துக்குப் பின் 10,000 நில அதிர்வுகள் பதிவு

கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தின் பின்னர் 24 மணி நேரத்திற்குள் 570 க்கும் மேற்பட்ட பின்அதிர்வுகள் பதிவாகியுள்ளன. மேலும் மூன்று வாரங்களில் 10,000 க்கும் அதிகமானவை பதிவாகியுள்ளன. அதன் பிறகு அதிர்வுகளின் அதிர்வெண் மற்றும் தீவிரம் குறைந்துள்ளது. ஆனால் பூகம்பம் தொடர்ந்து அச்சுறுத்தலாகியுள்ளது.

கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி  துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவை 7.8 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த பூகம்பம் தாக்கியது.

குறித்த பூகம்பத்தில் சிக்கி துருக்கி மற்றம் வடமேற்கு சிரியாவில் 50,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில்,  பூகம்பத்தின் பின்னர் 24 மணி நேரத்திற்குள்  570 க்கும் மேற்பட்ட நிலஅதிர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும்,  மூன்று வாரங்களில் 10,000 க்கும் மேற்பட்ட   நில அதிர்வுகள் பதிவு செய்யப்பட்டடுள்ளன.

சக்தி வாய்ந்த பூகம்பங்கள்  ஏற்படும்போது அவைகளைப் பின் தொடர்ந்து மேலும் சில அதிர்வுகள் பொதுவாக ஏற்படுகின்றன.

சக்தி வாய்ந்த பூகம்பத்துடன் ஒப்பிடும்போது பல பின்அதிர்வுகள் சிறியதாக இருக்கலாம். ஆனால் சில நில அதிர்வுகள் துருக்கியில் இருந்தது போல் கடுமையான மற்றும் அழிவுகரமானதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி  துருக்கி மற்றம் வடமேற்கு சிரியாவில் 7.8 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டதன் பின்னர், 20 ஆம் திகதி துருக்கியில் உள்ள அன்டாக்யா நகருக்கு அருகில் 6.4 ரிச்டர்   அளவில் மற்றொரு பூகம்பம் ஏற்பட்டு ஆறு பேர் உயிரிழந்தனர்.

27 ஆம் திகதி  மாலத்யா அருகே 5.6 ரிச்டர் அளவிலான மற்றொரு பூகம்பம் ஏற்பட்டு  ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 110 பேர் காயமடைந்தனர். 29 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

துருக்கி பூகம்பம் 7.5 ரிச்டர் அளவிலான பூகம்பத்தை தூண்டியதோடு, பூமியின் மேற்பரப்பில் ஒரு தனி சிதைவை ஏற்படுத்தியயுள்ளது.

பூகம்பவியலாளர்கள் பின்அதிர்வுகளை ஒரு பெரிய பூகம்பத்தால் தூண்டப்பட்ட பூகம்பங்கள் என வரையறுக்கின்றனர், அவை நேரம் மற்றும் இருப்பிடத்தில் நெருக்கமாக இருக்கும். இந்த அதிர்வுகளில் பல பெரியதாக இருப்பதால், அவை பின் அதிர்வுகளின் தொடர் சங்கிலியை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *