
தென் கொரியாவை பாரிய சூறாவளி ஒன்று தாக்கியுள்ளது.
ஹின்னம்னோர் என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி, தென்கொரியாவின் தெற்கு கரையை தாக்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூவாயிரத்து 500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஜியோஜி நகர் பகுதியில் பாரிய மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதோடு வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. ஹின்னம்னோர் சூறாவளி வடக்கு திசை நோக்கி மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் நகர்வதாக தெரிவிக்கப்படுகிறது. தென்கொரிய பிரதமர் அவசர கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
2003ஆம் ஆண்டு பாரிய அழிவை ஏற்படுத்தி மேமி சூறாவளியை போன்று ஹின்னம்னோர் சூறாவளியின் தாக்கமும் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அங்கு நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்தாகியுள்ளதோடு பொது போக்குவரத்துகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.