தொடரூந்தில் மோதி உயிரிழந்தவர் தொடர்பான விபரம்!

யாழ்ப்பாணம் – நீராவியடி பிள்ளையார் கோவில் பகுதியில் தொடரூந்தில் மோதுண்டு உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் வௌியாகியுள்ளன.

இந்தச்சம்பவம் இன்றையதினம் அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த அஞ்சல் தொடரூந்துடன் மோதுண்டதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவரின் முறையான அடையாளங்கள் தெரியாத நிலையில், அவர் மலையகம் கண்டி பகுதியைச் சேர்ந்தவர் என்று ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் 30 வயது மதிக்கத்தக்கவர் என்றும் 5 அடி உயரமும் பொது நிறத்தையும் உடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை நிற ரீசேட்டும், காற்சட்டையும் அணிந்திருந்ததுடன், உலப்பனை – வட்டவளை – ஹட்டன் நகரங்களுக்கு சென்ற பயணச்சீட்டுகள் அவரின் காற்சட்டை பையில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

கண்டியைச் சேர்ந்தவர் என்று அறியமுடிவதுடன் இவர் கையை அசைத்த வண்ணம் தொடரூந்து தண்டவாளம் முன் நின்றுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

உடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மரணவிசாரணையை யாழ்ப்பாண வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

உரியவர்கள் இனங்காணும் பொருட்டு உடலம் கோப்பாய் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *