தொடரை வென்றது நியூஸிலாந்து!

மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 301 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக கைல் மேயர்ஸ் 105 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலளித்தாடிய நியூசிலாந்து அணி 47.1 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2- 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *