
தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து வகையான நிலையான தெலைபேசி மற்றும் அலைபேசிக் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன.
கட்டணம் செலுத்தி பார்வையிடும் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இந்தக் கட்டண அதிகரிப்பு கூடுதல் தொகையில் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் நாட்களில் கட்டண அதிகரிப்பு குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.