
கிண்ணத்தை தாய் நாட்டிற்கு கொண்டுவர நமது சிங்கங்களை உற்சாகப்படுத்துவதற்காக டயலொக் மற்றும்
இலங்கை கிரிக்கெட் (SLC) இணைந்து ‘Wishing Portal’ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளரான டயலொக் ஆசிஆட்டா
பிஎல்சி மற்றும் இலங்கை கிரிக்கெட் ஆகியன இணைந்து 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி
ஐக்கிய அரபு நாடுகள், டுபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெறுகின்ற ஆசிய கிண்ண T20
போட்டியின் இறுதிப் போட்டியில் நமது சிங்கங்களை உற்சாகப்படுத்துவதற்காக வாழ்த்து
பிரச்சாரமொன்றை ஆரம்பித்துள்ளன.
வாழ்த்த விரும்புகின்ற ரசிகர்கள் அதற்குரிய போர்ட்டலை (Portal) QR குறியீடு மூலமாகவோ அல்லது
இணையத்தளம் வழியாகவோ அணுகலாம்.
அதன்படி, இலங்கை கிரிக்கெட் அணி எட்டு வருட நீண்ட இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் இறுதிப் போட்டியில் வென்று கிண்ணத்தை இலங்கைக்கு கொண்டு வர வேண்டும் என விரும்புகின்ற மற்றும் உற்சாகப்படுத்த விரும்பும் இலங்கையர்கள் இந்த போர்ட்டலை அணுகி தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்திடலாம்.
மேற்படி, இறுதிப் போட்டியானது கொழும்பு CR&FC மற்றும் CH&FC மைதானங்களிலும், மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்திலும், கண்டி கட்டம்பே மைதானத்திலும், அனுராதபுரம் இராஜாங்கனை மைதானத்திலும், யாழ்ப்பாணம் கலைமதி விளையாட்டுக் கழக மைதானத்திலும் நேரடியாக அகன்ற தொலைக்காட்சி திரையில் கட்டப்படும்.
இலங்கை அணியானது இறுதியாக 2014ஆம் ஆண்டு ஆசிய கிண்ண மாபெரும் இறுதிப்போட்டியில்
ஏஞ்சலோ மேத்யூஸ் தலைமையில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்து ஆசிய கிண்ணத்தை
வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்முறையும் அதேபோன்று இலங்கை அணி பாகிஸ்தான் அணியை எதிர்த்தாடுகின்ற போதிலும் தற்செயலாக தற்போதைய இலங்கை அணியில் 2014 ஆம் வருட ஆசிய கிண்ணத்தை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் எவரும் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
சுப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி மற்றும் அனுபவம் வாய்ந்த முன்னாள் செம்பியன்களான இந்திய அணி ஆகியவற்றை தோற்கடித்ததன் மூலம் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக எங்கள் இளம் திறமைகளை நம்பி, கிரிக்கெட் விளையாட்டை
ஆதரித்தமைக்காக தேசிய அணியின் அனுசரணையாளரான டயலொக் ஆசிஆட்டாவிற்கு நான் உண்மையில் நன்றி கூறுகிறேன், என இலங்கை கிரிக்கெட்டின் உதவி செயலாளர் கிரிஷாந்த கப்புவத்த தெரிவித்தார்.
இது போன்ற பிரச்சார நடவடிக்கைகள் நாட்டினதும், விளையாட்டு வீரர்களினதும் மன உறுதிக்கு மிகவும் இன்றியமையாத ஊக்கத்தை அளிக்கிறது. இந்த பிரச்சாரத்தை தொடங்கியதற்காக டயலொக் நிறுவனத்திற்கு எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியானது டயலொக் டெலிவிஷன் அலைவரிசை இலக்கம் 73 (SD), 130 (HD)
இல் நேரடியாக ஒளிபரப்பாகும், மேலும் Dialog Viu மொபைல் App இல் நேரலையாக ஸ்ட்ரீம் செய்யலாம்