நரேந்திர மோடியின் பிறந்த நாளில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய இனம்!

1952 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சிறுத்தைகள் இந்தியாவில் முதன்முறையாக சுற்றித் திரிவதாக பிபிசி தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள்,இன்று இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

மத்திய இந்தியாவில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் விடுவிக்கப்படுவதற்கு முன்னர் அவைகள், ஒரு மாத கால தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளன.

சிறுத்தைகள் முன்னர் சிங்கங்கள் மற்றும் புலிகள் போன்ற பெரிய விலங்குகளுடன் காடுகளில் வாழ்ந்து வந்தன. எனினும் 70 ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்துவிட்டன.

அவை உலகின் அதிவேக நில விலங்குகள் என்று கூறப்படுகின்றன.

அவை மணிக்கு 70 மைல் (113 கிமீ) வேகத்தை எட்டும் திறன் கொண்டவையாகும்.

இந்தநிலையில் பெரிய மாமிச உண்ணியான சீட்டாஸ் என்ற சிறுத்தை ஒரு கண்டத்தில் இருந்து மற்றொரு கண்டத்திற்கு மாற்றப்பட்டு மீண்டும் காடுகளில் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த சிறுத்தைகள் போயிங் 747 பயணிகள் விமானத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன

உலகில் உள்ள 7000 சிறுத்தைகளில் மூன்றில் ஒரு பங்கு, தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியாவில் வசிக்கின்றன.

இதில் குறைந்தது 20 சிறுத்தைகள் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகின்றன.

இதில் முதல் தொகுதியாக, ஐந்து பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் என இரண்டு முதல் ஆறு வயது வரையான சிறுத்தைகள், நமீபியாவில் உள்ள வின்ட்ஹோக்கில் இருந்து இந்திய நகரமான குவாலியருக்கு இன்று கொண்டு வரப்பட்டுள்ளன.

குவாலியரில் இருந்து இந்த சிறுத்தைகள் உலங்கு வானூர்திகள் மூலம் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு மாற்றப்பட்டன.

அங்கு அவை பிரதமர் நரேந்தி மோடி தலைமையிலான குழுவால் காடுகளில் விடுவிக்கப்பட்டன.

பிரித்தானிய காலனித்துவ காலத்தில் செம்மறி ஆடு மேய்ப்பவர்களால் இந்தியாவில் குறைந்தது 200 சிறுத்தைகள் கொல்லப்பட்டதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

இந்தியாவில் 1556 முதல் 1605 வரை ஆட்சி செய்த முகலாய பேரரசர் ஜஹாங்கீரின் காலத்தில் 10,000 சிறுத்தைகள் இருந்ததாக அவரது தந்தை அக்பர் பதிவு செய்தார்.

எனினும் இந்தியாவில், 19 ஆம் நூற்றாண்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை இருநூறாக குறைந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *