நாடு நெல் கிலோகிராம் ஒன்றுக்கு 140 ரூபாவேனும் வழங்க வேண்டும் – தனியார் அரிசி வர்த்தகர்கள்

அரசாங்கம் நெல் கொள்வனவு செய்யும்போது, நாடு நெல் கிலோகிராம் ஒன்றுக்கு 140 ரூபாவேனும் வழங்க வேண்டும் என தனியார் அரிசி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து எமது செய்திச் சேவை வினவியபோது பதிலளித்த ரத்ன அரிசி நிறுவனத் தலைவர் மித்ரபால லங்கேஸ்வர, விவசாயிகள் கடந்த போகத்தில் உரத்துக்காக அதிக பணத்தை செலவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது அரசாங்கம் 120, 125, 130 ரூபா என்ற விலையில் நெல்லை கொள்வனவு செய்கிறது.

மத்திய அளவான அந்த விலை, விவசாயிகளுக்கு போதுமானதல்ல.

140, 150 ரூபா வழங்க வேண்டும் என்றே விவசாயிகள் கூறுவதை ஊடகங்கள் வாயிலாக அவதானிக்க முடிந்தது.

அவ்வாறு வழங்காவிட்டால், பெரும்போகத்தில் விவசாயிகள் எவ்வாறு பயிர்ச்செய்கையில் ஈடுபடுவார்கள் என்பது தெரியாது என்ற நிலையே உள்ளது.

எனவே, நெல்லுக்கான விலையை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என ரத்ன அரிசி நிறுவனத் தலைவர் மித்ரபால லங்கேஸ்வர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்காலத்தில் நெல்லுக்கு அதிக விலையை பெற்று தருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *