
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், பொதுமக்கள் அமைதியைப் பேணுவதற்காக, ஆயுதம் தாங்கிய முப்படையினரை ஈடுபடுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12ஆம் பிரிவினால், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளை மறுதினம் முதல், 25 மாவட்டங்களிலும், பாதுகாப்புக்காக முப்படையினரையும் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது