
ஊவா, கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் கடுமையான மின்னலுடனான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இந்தப் பிரதேசங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.
அத்துடன் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
இந்தநிலையில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.