
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த காலப்பகுதியில் அதிகளவான மழைவீழ்ச்சி (150.5 மில்லிமீற்றர்) ஹங்வெல்ல பகுதியில் பதிவாகியுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் வகரக பகுதியில் 133 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சியும், அவிசாவளை பகுதியில் 114 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சியும் பதிவாகின.
இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோர பகுதிகளில் காற்று மணித்தியாலயத்திற்கு 60 முதல் 70 வரையான வேகத்தில் வீசக்கூடும்.
இதனால் எதிர்வரும் 24 மணித்தியாலயங்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.