நாட்டில் குறைந்தது 50,000 சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனை, யுனிசெஃப் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கத் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
மேலும் 22 இலட்சம் சிறுவர்கள் குழந்தைகள் உணவுப் பாதுகாப்பின்மை தொடர்பான பிரச்சினைகளால் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் 75 சதவீதத்தை உணவுக்காக ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்களால் மருத்துவம், கல்வி மற்றும் சுகாதாரச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.