நாம் விடுதலைப் புலிகள் தலைவரின் மக்கள் தான்! முடிந்தால் சுடுங்கள் பார்ப்போம்” – பகிரங்க சவால்

“நாம் விடுதலைப் புலிகள் தலைவரின் மக்கள் தான்! முடிந்தால் சுடுங்கள் பார்ப்போம்” – பகிரங்க சவால்

“தமிழன் தமிழன் தான், நாம் எல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் மக்கள் தான், உங்களால் முடிந்தால் என்னை சுடுங்கள் பார்ப்போம்” என யாழில் நடைபெற்ற போராட்டத்தின் போது தாயொருவர் பொலிஸார் மற்றும் படையினரை நோக்கி பகிரங்க சவால் விடுத்து பேசியுள்ளார்.

மேலும் இன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் நாம் இந்த இடத்தில் நின்றிருக்க மாட்டோம், நாம் எல்லாம் எவ்வளவு செல்லப்பிள்ளைகளாக வாழ்ந்தோம் தெரியுமா எனவும் தெரிவித்து மிகவும் மனம் வருந்தி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் தேசிய பொங்கல் விழாவிற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழிற்கு வருகைதந்திருந்த போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திகளின் தொகுப்பு,<iframe width=”640″ height=”360″ src=”https://www.youtube.com/embed/ThC9MDiD8RQ” title=”செய்தித்தொகுப்பு -16.01.2023 | Srilanka Tamil News | SriLanka News” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” allowfullscreen></iframe>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *