நாலு கால்களுடன்பிறந்த கோழிக்குஞ்சு உயிரிழப்பு

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக் குஞ்சு நான்கு நாட்களின் பின் உயிரிழந்துள்ளது.

அச்சுவேலி காலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை கோழிக்குஞ்சு ஒன்று நான்கு கால்களுடன் பொரித்துள்ளது.

மகாராஜா கௌரி என்ற குடும்பப் பெண் கோழி வளர்ப்பினையே ஜீவனோபாயமாக கொண்டு கோழிகளை வளர்த்து வருகின்றனர்.

அவர் அண்மையில் 10 முட்டைகளை வாங்கி கோழி ஒன்றின் மூலம் அடைகாத்துள்ளார். அதில் ஆறு குஞ்சுகள் பொரித்தன இறுதியாக பெரித்த குஞ்சு நான்கு கால்களுடன் பிறந்துள்ளது.

ஏணைய கோழி குஞ்சுகளைப் போல குறித்த கோழி குஞ்சும் சுறுசுறுப்பாக இருந்துள்ளது

குறித்த கோழிக்குஞ்சினை பிரதேசத்தில் உள்ள மக்கள் பார்வையிட்டு வந்தனர். இந்நிலையில் அந்தக் கோழிக்குஞ்சு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.