நாவாய் மண்ணின் இரண்டு ஆளுமைகள் “உலகத் தமிழ் மாமணி ” விருது பெற்றனர்.

நாவாய் மண்ணின் இரண்டு ஆளுமைகள்
“உலகத் தமிழ் மாமணி ” விருது பெற்றனர்.

உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் நடாத்திய 15ஆவது பன்னாட்டு மாநாடு 06,07/10/2022 அன்று இந்தியாவில்
தமிழ்நாட்டில் உள்ள இராசா நந்திவர்மன் கலை,அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஈழத்தை சேர்ந்த கலைஞர் N.M.பாலச்சந்திரன் இயல்இசை நாடகத்திற்கு ஆற்றியகலைப்பணிக்காகவும்
மற்றும் திரு.ஜே.எஸ். மைக்கல் கொலின்ஸ் கல்வி, அரசியல், சமூகப்பணிக்கான “உலகத் தமிழ் மாமணி “விருதும் வழங்கி கௌரவிக்கப் பட்டனர். இவ்விருதுகளை உலகத் தமிழர் பண்பாட்டு இயகத் தலைவர் திரு.அ.இளஞ்செழியன் மற்றும் முன்னாள் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்களும் வழங்கி கௌரவித்தமை சிறப்பானதாகும். அத்துடன் இந்நிகழ்வில் உலகம் முழுவதிலும் இருந்து பல முக்கிய தமிழறிஞர்களும் ஆளுமைகளும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
அத்தோடு அன்றைய நிகழ்வில் விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்த பாண்டிச்சேரி முதலமைச்சருடன் அவரது முதலமைச்சர் இல்லத்தில் இடம்பெற்ற பிரத்தியேக சந்திப்பில் திரு மைக்கல் கொலின்ஸ் , திரு.மாவை சேனாதிராசா மற்றும் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் மங்களேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
கலை வளமும் கடல் வளமும் கல்வி கலாசார வளமும் மேலோங்கிய நம் நாவாய் மண்ணை உலகளாவ புகழோங்கிடச் செய்து கடல் கடந்து மேலோங்கிடச் செய்து நமக்கும் நம் மண்ணுக்கும் பெருமை தேடித்தந்த N.M.பாலச்சந்திரன் மற்றும் திரு. ஜே.எஸ். மைக்கல் கொலின்ஸ் ஆகியோரை எம் ஊர் மக்கள் சார்பாகவும்
நாவாய் மண்ணின் சார்பாகவும் இவர்களை வாழ்த்தி நிற்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *