
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது நியூசிலாந்து கிரிக்கெட்டை விட பணக்காரர்களாக உள்ளது என அதன் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட்டின் நிலையான வைப்புத்தொகை தற்போது 40 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் காணப்படுகின்றது. இது கடந்த 2 – 3 வருடங்களாக தற்போதைய நிர்வாகத்தால் சேகரிக்கப்பட்டுள்ளது எனவும் ஷம்மி சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மேலும் கூறுகையில்,
தற்போதைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகம் பொறுப்பேற்க முன், இலங்கை கிரிக்கெட் தனது கணக்கில் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பேணவில்லை.
இருப்பினும், தற்போதைய நிர்வாகம் கடந்த 2-3 ஆண்டுகளில் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வசூலித்துள்ளது.
35 மில்லியன் அமெரிக்க டொலர்களை மட்டுமே கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட்டைவிட தற்போது இலங்கை கிரிக்கெட்டிடம் அதிக நிதி உள்ளது.
இலங்கை ஆசியக் கிண்ணப் போட்டிகளை நடத்த முடியாத போதிலும் 4 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பெற்றுள்ளது.
இலங்கை கிரிக்கெட் கடந்த 2-3 வருடங்களாக கடனைக் கோராதது சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் நிலையான வைப்புத்தொகையில் உள்ள நிதி விவரங்களை அறிந்தவர்கள் இப்போது சேறுபூசும் பிரச்சாரத்தை உருவாக்குவதுடன் குற்றச்சாட்டுகளை சுமந்துகின்றனர். இது இறுதியில் கிரிக்கெட்டை மீண்டும் அழிவுப்பாதை்கு இட்டுச்செல்லும்.
இதேவேளை, வெளிச்சக்திகள் மீண்டும்கிரிக்கெட் விளையாட்டை அழிக்க முற்பட்டால் அதற்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அனுமதிக்காது எனவும் ஷம்மி சில்வா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.