வடக்கு துருக்கியின் பார்டின் மாகாணத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 28 பேர் பலியாகினர்.
மேலும் பலர் சுரங்கத்தில் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் குறித்த நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்று 110 பேர் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் அரைவாசி பேர் 300 மீற்றருக்கும் அதிகமான ஆழத்தில் இருந்தனர்.
வெடிப்பின் பின்னர், 11 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக துருக்கியின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறித்த நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிப்பு சுமார் 300 மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்த நிலையில் சுமார் 300 முதல் 350 மீற்றர் வரையிலான ‘ஆபத்தான’ பகுதியில் சுமார் 49 பேர் பணிபுரிந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவசரகாலக் குழுக்கள் இரவு முழுவதும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
வெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.