நீதிமன்றம் உத்தரவுபடி தோட்ட நிர்வாகிகள் வேதனம் வழங்க வில்லை. தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்

(வாஸ் கூஞ்ஞ)

தங்களுக்கு  நீதிமன்றம் உத்தரவுபடி தோட்ட நிர்வாகிகள் வேதனம் வழங்க வில்லை மாறாக பறிக்கும் பச்சை கொழுந்து படி கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் வழங்க நடவடிக்கை எடுத்து உள்ளனர் என கோரி சாமிமலை மல்லியப்பூ தோட்டத்தில் பணிபுரியும் ஆண் பெண் இருபாலரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இறங்கியிருந்தனர்.

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான சாமிமலை மல்லியப்பூ தோட்டத்தில்  அங்கு பணிபுரியும் ஆண் பெண் இருபாலரும்  திங்கள் கிழமை (12.09.2022) காலை முதல் பணி பகிஸ்கரிப்பு மேற் கொண்டு ஆர்ப்பாட்டம் ஒன்றை அத் தோட்டத்தில் நடத்தினார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கு  நீதிமன்றம் உத்தரவுபடி தோட்ட நிர்வாகிகள் வேதனம் வழங்க வில்லை என்றும் மாறாக பறிக்கும் பச்சை கொழுந்து படி கிலோ ஒன்றுக்கு 50ஃஸ்ரீ ரூபாய் வீதம் வழங்க நடவடிக்கை எடுத்து உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
ஆனால் தங்களுக்கு வழங்க வேண்டிய  1000ஃஸ்ரீ வேதனம் வழங்க வில்லை என்றும் தெரிவித்த நிலையில் இன்று சகல பொருட்களும் பல மடங்கு உயர்ந்தது உள்ளது. 1000ஃஸ்ரீ ரூபாய் வேதனம் வழங்கினாலும் எமக்கு அந்த வேதனம் உகந்ததாக இல்லை.
இவ்வாறான கால கட்டத்தில் அரசாங்கம் உடனே நடவடிக்கை எடுத்து பெருந்தோட்ட தொழிலாளர்கள் பாதிக்க படுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்தே இவ் ஆர்ப்பாட்டத்தில்  இறங்கியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.