
நேபாளம் – காத்மண்டு நகரில் இன்றைய தினம் 4.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நேபாளம் தலைநகர் காத்மண்டுவிலிருந்து 155 கிலோமீற்றர் தொலைவில் 100 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கத்தினால் எவ்வித சேதங்களும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 19 ஆம் திகதி காத்மண்டுவில் ரிக்டர் அளவுகோலில் 5.1 மெக்னிடியூட் அளவிலான நில நடுக்கம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.