நேபாளத்தில் நிலநடுக்கம்: 6 பேர் பலி – ஐவர் காயம்

நேபாளத்தில் நிலநடுக்கத்தினால் அறுவர் உயிரிழந்துள்ளனர், ஐவர் காயமடைந்துள்ளனர்.

நேபாளத்தில் இன்று அதிகாலை 1.57 அளவில் நில அதிர்வானது உணரப்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வு 10 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நேற்று காலை நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் 4.5 ரிக்டர் அளவிலான நில அதிர்வு உணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த நில அதிர்வு இந்தியாவின் மணிப்பூர் மற்றும் டில்லியிலும் உணரப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *