நியூஸிலாந்தில் இடம்பெறும் முக்கோண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து அணி 48 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் முக்கோண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடர் இடம்பெற்று வருகின்றது.
இன்று இடம்பெற்ற 5ஆவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றது.
பின்னர் 209 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய பாங்களாதேஷ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
நியூஸிலாந்து அணி, 4 போட்டிகளில் 3இல் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலாம் இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் அணி, 3 போட்டிகளில் 2இல் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும், பங்களாதேஷ் அணி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து எந்தவொரு புள்ளியையும் பெறாத நிலையில் 3ஆம் இடத்திலும் உள்ளது.